
posted 27th February 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். பல்கலையில் பணிப்புறக்கணிப்பு - ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அரச பல்கலைக்கழகங்களில் புதனும் (28), வியாழனும் (29) பணிப்புறக்கணிப்பும், கவனவீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் இந்தப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், அரசாங்கமும் இதுவரை தீர்வு வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உடனடித் தீர்வு வேண்டியும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிப்புறக்கணிப்பு நடைபெறும். இதேசமயம், வியாழக்கிழமை (29) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.
இதனிடையே, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் இவ் இரு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். அத்துடன், நாளை (28) முற்பகல் 11 மணிக்கு யாழ். பல்கலைக்கழக முன்னறில் கவனவீர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)