
posted 4th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ். பல்கலைக்கழகத்தில் பறந்தன கறுப்பு கொடிகள்
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவுகூரும் வகையில் இன்று (04) ஞாயிறு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கொடிக் கம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டது. அத்துடன், பல்கலைக்கழக சூழலிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரிநாளாக வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் மாணவர்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. அத்துடன், பல்கலைக்கழக சூழலில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)