
posted 29th February 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். இந்திய துணைத்தூதராக பொறுப்பேற்ற சாய் முரளி
யாழ்ப்பாணத்துக்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி கடமைகளை பொறுப்பேற்றார் என்று யாழ். இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதராக செயல்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் டில்லிக்கு அழைக்கப்பட்டார். திங்கட்கிழமை (26) அவரின் கடமை நிறைவுக்கு வந்தது. இந்த நிலையில், அன்றைய தினமே சாய் முரளி தனது பதவியை பொறுப்பேற்றார்.
செவிதி சாய் முரளி முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் துணைத் தூதராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)