
posted 26th February 2024
உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மீனவரின் வலையில் அகப்பட்ட பாரிய சுறா மீன்
வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம் வட்டாரத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையில் நேற்று 25.02.2024 ஞாயிற்றுக் கிழமை பாரிய சுறாமீன் ஒன்று பிடிபட்டுள்ளது.
உடுத்துறை 10ம் வட்டாரத்தில் இருந்து நேற்று (25) கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவருக்கே இந்த அதிர்ஷ்டர் கிட்டியுள்ளது.
குறித்த சுறா மீனுடைய மொத்த நிறை 3700Kg எனவும், நீண்ட காலத்திற்கு பிறகு வடமராட்சி கிழக்கில் அகப்பட்ட அதிகளவான நிறை உடைய சுறா மீன் இதுவாக உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுறா மீன் பிடிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து நேற்று காலை அதிகளவான பொதுமக்கள் உடுத்துறை கடற்கரையில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)