மன்னார் வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

மருத்துவர்கள் தவிர்ந்த இலங்கையில் உள்ள 72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் ரூ. 35,000 கொடுப்பனவு கோரி நேற்று (14) செவ்வாய்க் கிழமை காலை முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.

நேற்று முன் தினம் நிதியமைச்சுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து 72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்களும் நேற்றுக் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார பணியாளர்கள் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)