
posted 16th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
பிராந்திய சுகாதார பணிப்பாளர் சஹிலாவுக்கு வரவேற்பு
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவியேற்றுள்ள வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீனுக்கு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் ஏ.எல்.எம். அஜ்வத் தலைமையில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் டொக்டர் சனுஸ் காரியப்பர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுகாதார தகவல்கள் பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.எம். முஜீப், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபத்துல் ஹரீம், வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் பிரதித் தலைவர் எம்.எஸ்.எம். முபாறக், செயலாளர் எம்.ஐ.எம். சதாத் உட்பட வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சஹிலா இஸ்ஸதீன் நினைவுச் சின்னம் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளருடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)