பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா

பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை விழாவானது பாடசாலை முதல்வர் சபரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் நளாயினி வசந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

குறித்த பாடசாலைக் காணி கடந்த வருடம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

தரிசு நிலமாக காணப்பட்ட குறித்த காணியில் நெற்செய்கை மேற்கொண்டு இன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நெற்செய்கை செய்யப்பட்டு அறுவடை செய்து பெருமைதேடிய அப்பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இவ்வாறு பாடசாலைகள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தரிசு நிலங்களாக காணப்படும் நிலையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தின் செயற்பாடு பாராட்டத்தக்கது.

பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)