
posted 23rd February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ்ப்பாணத்தில் கைதான கொச்சிக்கடை பெண்கள்
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று (23) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றபோது பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்தனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்ட கொழும்பு கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து நான்கரை பவுண் தாலி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. விசாரணைகளின் பின்னர் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது
கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த சந்தேகநபர்களுக்கு நீதிமன்றங்களினால் பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களும், சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களுமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்ப்படுத்தப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)