
posted 5th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பன்றி வெடிக்கு சிக்கி குடும்பத்தர் பலி
பன்றி வெடிக்கு சிக்கி குடும்பத்தர் படுகாயமடைந்த நிலையில் சிகிக்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (05) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பட்டமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த மணவாளன் பழனி வடிவேல் (65), பட்டமுறிப்பு பகுதியிலேயே தேன் எடுக்கச் சென்ற சமயம் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தேன் எடுப்பதற்காக காலம் சென்றவரும், அவருடன் சிலரும் காட்டுக்கு சென்றுள்ள வேளையில் பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியில்
இக் குடும்பத்தவர் சிக்கிப் படுகாயம் அடைந்தார்.
இச் சம்பவத்தில், படுகாயம் அடைந்த இவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)