
posted 7th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் யாழ்ப்பாணத்தில்
பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள யாழ்ப்பாண இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா, பிரபல தென்னிந்திய நடன இயக்குநர் கலா மாஸ்டர் யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நேற்று (06) யாழ்ப்பாணம் வந்தனர்.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை மறுதினம் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், தென்னிந்திய திரை பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு , சாண்டி மாஸ்டர், புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)