திருவிழாவுக்கு தயாராகும் கச்சதீவு

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

திருவிழாவுக்கு தயாராகும் கச்சதீவு

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகளில் கடற்படை ஈடுபட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23, 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருகின்றது.

இதேசமயம், திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிகளுக்காக உட்கட்டமைப்பு வசதிகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் உத்தரவுக்கமைய, வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் மேற்பார்வையின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

கச்சதீவு இறங்குதுறைகள் தயார்ப்படுத்தப்படும் அதேநேரம் பக்தர்களுக்கான குடிதண்ணீர் மற்றும் சுகாதார விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தங்குமிடங்கள், பாதைகள் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கவும் வழியேற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மருத்துவ குழுக்களை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கச்சதீவுக்கு குறிகாட்டுவானிலிருந்தும் நெடுந்தீவிலிருந்தும் படகு சேவைகள் நடைபெறவுள்ளன. இந்த ஆண்டும் இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் தலா 4 ஆயிரம் வரையிலான பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழாவுக்கு தயாராகும் கச்சதீவு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)