
posted 4th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சுதந்திர தினமான நேற்று யாழ்ப்பாணத்தில் பேரணி
நாட்டின் 76ஆவது சுதந்திர தினமான நேற்று ஞியிறு யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமான இந்தப் பேரணி மருத்துவமனை வீதியூடாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்து நிறைவுற்றது.
இதில், பங்கேற்றவர்கள் தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியவாறு நடந்தனர். அத்துடன், மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டிகளும் இந்தப் பேரணியில் பங்கேற்றன.
மூவினத்தை சேர்ந்தவர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். அத்துடன், அரச ஆதரவு கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)