
posted 6th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சுதந்திர இரவுகள்
நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன் புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவிருக்கின்றது.
“சுதந்திர இரவுகள்” எனும் தலைப்பிலான இந்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் ஆரம்பமாகி நடைபெறவிருப்பதாக பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.ரி.எம். சரீம் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் தலைமையில் நடைபெறவிருக்கும் மேற்படி சுதந்திர இரவுகள் ஒன்று கூடல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிர பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும், நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கௌரவிக்கப்படவுள்ளதுடன், கல்விச் சாதனைகள் புரிந்த செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அதேவேளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பங்குபற்றும் கலைநிகழ்வுகள் பலவும் நிகழ்வில் இடம்பெறவுள்ளன.
இந்த வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வையொட்டி பிரதேச செயலக வளாகம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)