
posted 17th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
காணி அனுமதிப்பத்திரம் வழங்கல்
மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரிக்கின்ற மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தின் அனுமதி பெற்று காணிக்கச்சேரிகளை நடாத்திய பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் 3ஆம் கட்ட நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா தியாவட்டவான் கிராம சேவகர் எம். எம்.ஏ. சாதாத், காணி வெளிக்கள போதன ஆசிரியர் சி.எம்.எம். சமீம் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)