
posted 27th February 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
கல்முனை மாநகர சபையில் ஒன்லைன் கொடுப்பனவு முறைமை அங்குரார்ப்பணம்
கல்முனை மாநகர சபையில் ஒன்லைன் மூலமாக கொடுப்பனவுகளை செலுத்தும் "CAT-20 Payment System" மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகளைக் கருத்தில் கொண்டு, நிதிப் பிரிவை ஒழுங்குமுறைப்படுத்தி, மோசடிகளை முற்றாகத் தவிர்த்து நம்பகமான முறைமையை நடைமுறைப்படுத்தும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை என்பவற்றின் அங்கீகாரம் பெற்ற வயம்ப அபிவிருத்தி அதிகார சபையின் CAT-20 எனும் செயலி ஒன்று யூ.என்.டி.பி. நிறுவனத்தின் அனுசரணையுடன் சில மாதங்களுக்கு முன்னர் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் ஓர் அங்கமாகவே ஒன்லைன் மூலமாக கொடுப்பனவுகளை செலுத்தும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டு குறித்த ஒன்லைன் மூலமான கொடுப்பனவு முறைமையை செயற்படுத்துவது தொடர்பிலான ஆலோசனை, வழிகாட்டல்களை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் உட்பட வயம்ப அபிவிருத்தி அதிகார சபையின் மற்றும் யூ.என்.டி.பி. அதிகாரிகளும் மாநகர சபையின் பிரிவுத் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் பங்கேறிருந்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)