ஐக்கிய காங்கிரஸ் கட்சி என்பது இனவாத, மதவாத கட்சியல்ல

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஐக்கிய காங்கிரஸ் கட்சி என்பது இனவாத, மதவாத கட்சியல்ல

ஐக்கிய காங்கிரஸ் கட்சி என்பது இனவாத, மதவாத கட்சியல்ல இக்கட்சியின் இலக்கு என்பது மூவினங்களையும் இணைத்து எதிர்காலத்தில் பலமான தேசிய கட்சியாக வேண்டும் என்பதுதான். ஜனாதிபதி ஒருவரையும் இக்கட்சி பெற வேண்டும் என்பதும் எமது இலக்காகும். இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் கட்டாயம் சிங்கள சகோதரர்களையும் இக்கட்சியின் தலைவர்களாக நியமிக்கும்போதுதான் எமது அந்த இலக்கை அடைய முடியும்.

தற்போது எமது கட்சியின் ஸ்தாபக தலைவராக முஸ்லிம் ஒருவர் இருக்கிறார். இதன் தலைவராக தமிழ் சகோதரரும் அறிவிக்கப்படுவார். அடுத்த வருடங்களில் சிங்களவர் கூட கட்சியின் தலைவராக வருவார். அதற்கான முயற்சிகளும், பேச்சுவார்த்தைகளும் உள்ளன.

ஒரு முஸ்லிம் மௌலவியால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, மூவினங்களையும் இணைத்து பெரியதொரு தேசிய கட்சியாக வரும்பட்சத்தில் இது இந்நாட்டின் மிகப்பெரிய வரலாறாக அமையும்.

இந்த உண்மை புரியாமல் எமது கட்சியில் இருந்த இருவர் முஸ்லிம் மட்டும்தான் தலைவராக இருக்க வேண்டும் என இனவாதமாக பேசி வருகின்றனர். தமிழரோ, சிங்களவரோ தலைவராக வருவது என்றால் கட்சியை விற்றுவிட்டதாக மக்களுக்கு பொய் சொல்லி கட்சிக்கு எதிராக செயற்படுவோம் என எம்மை அச்சுறுத்துகிறார்கள். இந்த பூச்சாண்டிக்கெல்லாம் இக்கட்சித் தலைமை அச்சப்படாது. இலட்சியம் மட்டுமே எமது இலக்கு. அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். என்றோ ஒரு நாள் இறைவன் உதவியால் இக்கட்சிக்கு முஸ்லிம், சிங்கள, தமிழ் எம்பீக்கள் கிடைக்கும் எனற நம்பிக்கை எனக்கு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய காங்கிரஸ் கட்சி என்பது இனவாத, மதவாத கட்சியல்ல

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)