
posted 14th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
உதயசூரியன் உள்ளூர் வெற்றிக்கிண்ணம் லைட்டிங் Boys வசம்
வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதய சூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையிலான உதை பந்தாட்ட போட்டிகளின் இறுதி போட்டி நேற்று (13) செவ்வாய்க்கிழமை மாலை 3.30மணியளவில் உதயசூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.
ஈஸ்டன் கிங்ஸ் அணியை எதிர்த்து லைட்னிங் Boys அணியினர் மோதிய இறுதி போட்டியின் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் செ. ராமச்சந்திரன், சிறப்பு விருந்தினர்களாக வத்திராயன் கிராம அலுவலர், வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர், வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் நடுவர் சங்க தலைவர், விளையாட்டு கழகங்களின் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியின் முடிவில் லைட்னிங் Boys 1- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உதயசூரியன் உள்ளூர் போட்டிக்கான கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.
1ஆவது மற்றும் இரண்டாவது இடத்திற்கான கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட அணியினருக்கு பணப்பரிசினையும், வெற்றிக் கிண்ணத்தையும் பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழங்கி கௌரவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)