
posted 4th February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
இரவோடிரவாக பொலிஸாரால் தடை உத்தரவு வழங்கப்பட்டது
நாட்டின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி இன்று (04) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்க 17 பேருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை இரவோடு இரவாக பொலிஸார் உரியவர்களுக்கு வழங்கினர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் அமைப்பாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராகவே மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவுகளை பெற்றிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)