
posted 23rd February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
இங்கிலாந்து மன்னரின் 75வது பிறந்த தின நிகழ்வு
இங்கிலாந்து சார்லஸ் மன்னர் அவர்களின் 75வது பிறந்த தின நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், கிங் சார்லஸ் அவர்கள் இலங்கை மலையகத்திற்கு வருகை தந்து அவர் தேயிலை தோட்டத்தில் மலையக பெண்களுடன் கலந்துரையாடிய புகைப்படத்தை பிறந்தநாள் பரிசாக வழங்கி வைத்தார்.
இப்புகைப்படமானது இந்தியாவிற்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலெக்ஸ் எல்லிஸ் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் ஒலிவர் பால்ஹாட்செட் ஆகியோரால் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)