
posted 16th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
மத்திய மலைநாட்டில் ஒருசில விஷமிகள் தோட்டப் பகுதிகளில் தீ வைப்பதனால் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த அனைத்து மக்களும் கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொலிசார் மக்களை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதன்கிழமை (15) மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சீக் தோட்ட சின்ன நடு தோட்டப் பிரிவில் தொலை தொடர்பு கோபுரம் அமைந்துள்ள பகுதியில் வன பகுதிக்கு தீ வைப்பு காரணமாக அப்பகுதியில் பலத்த அழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதியில் வாழ்ந்த வனஜீவராசிகள் அழிந்துள்ளதாகவும், இவ்வாறான தீ வைப்பு
மத்திய மலைநாட்டில் அதிகரித்து வருவதால் நீர் ஊற்று வற்றிப் போகும் அபாயமும் தோன்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே இதனை கட்டுப்படுத்த மலையக பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் முன் வரவேண்டும் என மஸ்கெலியா பொலிஸார் பொது மக்களை வேண்டியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)