விக்னேஸ்வரனைப்பற்றி சரவணபவன்

விக்னேஸ்வரனுடன் சென்றால் பெரிதாக சாதிக்கலாம் என்ற எண்ணத்துடனே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து சென்றது. ஆனால், விக்கினேஸ்வரன் சமர்த்தியமாக பிரித்து விட்டு ஒதுங்கிக் கொண்டுள்ளார் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஈ. சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே அவர் மேற்படி தெரிவித்தார்.

அத்துடன், விக்னேஸ்வரன் எங்கு சென்றாலும் சேர்வதும் பின்னர் பிரிப்பதுமே அவருடைய பாணி. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் புரிந்துணர்வு இல்லாமல் இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பாவித்து அவர் கட்சியை விட்டு அவர்கள் வெளியேறினார்கள். இதன் உண்மை தன்மை தொடர்பில் எதுவும் கூற முடியாத நிலையே காணப்படுகிறது.

பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் பாராளுமன்றத்தில் வைத்து பிரிந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர்கள் சம்மதித்திருந்தனர் என்று தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார். அதனை தான் நம்பினார் என்றும் சரவணபவன் கூறினார்.

விக்னேஸ்வரனைப்பற்றி சரவணபவன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)