'வாழும்போதே வாழ்த்துவோம்' விருது வழங்கும் வைபவம் இன்று (25.02.2023)

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

'வாழும்போதே வாழ்த்துவோம்' என்ற கொள்கைக்கு ஏற்ப சங்கவி பிலிம்ஸ் மற்றும் சங்கவி தியேட்டர் பிரைவேட் லிமிட்டட் தலைவர் கலாநிதி துரைராசா சுரேஸ் அவர்களின் ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கலாவிபூஷணம் உலகத் தமிழர் விருது வழங்கும் விழா இடம்பெறுகின்றது.

மூன்றாவது வருடமாக நடைபெறும் இவ்வருடத்துக்கான (2023) இவ் விழாவானது சனிக்கிழமை (25.02.2023) மன்னார் பேசாலை சங்கவி திரையரங்கின் மண்டபத்தில் காலை 11 மணி முதல் நடைபெறுகின்றது.

இவ்விழாவுக்கு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரும், மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கின் பங்குத் தந்தையுமான அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் இவருடன் தினகரன் பிரதம ஆசிரியர் ரி. செந்தில் வேலவர் , இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் தீபல் சந்திரரெட்ண ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுகின்றார்கள்.

இவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக பலரும் இதில் பங்கேற்கின்றனர்.

அகில இலங்கை ரீதியாக 25 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் 180 பேர் இவ்விருதினைப் பெறுகின்றனர்.

இவ்விழாவின்போது மன்னார் மாவட்டத்தில் கலையில் சிறந்து விளங்கும் பகுதிகளில் ஒன்றான பேசாலை கலைஞர்களால் மேடையேற்றப்படும் மாதோட்ட பாங்கிலான தாவீது நாட்டுக்கூத்தும் இடம்பெறுகின்றது.

'வாழும்போதே வாழ்த்துவோம்' விருது வழங்கும் வைபவம் இன்று (25.02.2023)

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)