
posted 19th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி - முடங்குதீவுப் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (17) இரவு குறித்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த பகுதி ஊடாகப் பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்துக்குப் பூ வைத்து, கற்பூரம் கொளுத்தி, தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்கின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)