
posted 27th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
யாழ் புற்றுநோய் சத்திரசிகிச்சை பிரிவானது 'கென்' என அழைக்கப்படும் வடக்கு கிழக்கு பிரிவுக்கான புற்றுநோயாளர்களுக்கான அமைப்பு மற்றும் கனடாவில் இயங்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்களை முடித்துக் கொண்டு கனடாவில் இயங்கிவரும் வைத்தியர்களைக் கொண்ட இவ் அமைப்பானது இங்குள்ள சுகாதார பகுதினருடன் இணைந்து அதிகமாக பரவிவரும் புற்றுநோயாளர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் மன்னார் பேசாலையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
தற்பொழுது பலவிதமான நோய்களுக்கு பலர் உள்ளாகி வருவதைக் கவனத்தில் எடுத்து வட கிழக்கு மாகாணங்களில் பொது மக்கள் நோய் வருமுன் காப்பாற்றப்பட வேண்டும் என்ற சிந்தனைக் கொண்டு தூரநோக்கின் செயல்பாடாகவே யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கிய குழுவினர் இந் நிகழ்வில் கலந்துகொண்டு செயல்பாட்டை முன்னெடுத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (26.02.2023) பேசாலை மன்.சென்.மேரிஸ் வித்தியாலயத்தில் மதியம் 12.30 மணி தொடக்கம் புற்றுறோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வும் பரிசோதனைகளும் அத்துடன் கண் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகளும் நோயாளர்களுக்கு இடம்பெற்றன.
நடமாடும் இலவச சேவையாக மேற்கொள்ளப்பட்ட இம் மருத்துவ முகாமில் புற்றுநோயாளர்களுக்காக இயங்கி வரும் 'கென்' அதாவது வடக்கு கிழக்குக்கான புற்றுநோயாளர்களுக்கான அமைப்பின் தலைவியாக லண்டனில் வசிக்கும் வைத்திய கலாநிதி திருமதி கமலா அருணாசலம், யாழ் வைத்திசாலை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ஸ்ரீதரன் , யாழ் வைத்திசாலை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி தனேந்திரன் , யாழ் வைத்தியசாலை பெண் புற்றுநோயாளர்களுக்கான அறுவை சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி தனுஷா, கிழக்கு பகுதி நோயியல் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி அகிலன் மற்றும் குடும்ப நல வைத்திய நிபணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி அருலாணந்தம் ஆகியோருடன் மேலும் சில வைத்தியர்களும் தாதியரும் இம் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு நோயாளர்களுக்கும் கலந்து கொண்ட பொது மக்களுக்கும் புற்றுநோய் தொடர்பான சிறந்த விளக்கங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இம்மருத்துவ முகாமில் இருநூறுக்கு மேற்பட்ட நோயாளர்கள் பயன்பற்றுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)