மன்னார் பிரதேச சபை உறுப்பினர் றாசீக் காலமானார்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். றாசீக் 22.02.2023 அன்று புதன்கிழமை அதிகாலை காலமானார். இவர் மன்னார் பெரிய கரிசலை பிறப்பிடமாகவும் மன்னார் மூர்வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

இவர் மன்னார் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு மன்னார் பிரதேச சபையின் கரிசல் வட்டாரத்துக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு ஐந்து வருடங்களாக மன்னார் பிரதேச சபை உறுப்பினராக திகழ்ந்து வந்தார்.

இதற்கு முன் அமரர் ராசீக் அவர்கள் ஆர்டீஎவ் தொண்டர் நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வந்தவர்.

இவர் கரிசல் றோ.க.த.க. பாடசாலை மற்றும் மன்.அல் அஸார் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமாவார்.

இவர் மக்களுடன் இன்முகத்துடன் பழகி வந்ததுடன் மன்னார் பிரதேச சபைக் கூட்டங்களில் கட்சி வேறுபாடு இன்றி அனைவருடனும் பண்பாக நடந்து கொண்டதுடன் தனது கருத்துக்களை மிகவும் பண்பான முறையில் முன்வைத்து யாவரின் மனதிலும் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரதேச சபை உறுப்பினர் றாசீக் காலமானார்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)