
posted 13th February 2023
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு 11 வருடங்களை நினைவுகூர்ந்து மன்னார் மறைமாவட்ட யாத்திரிகர் ஸ்தலங்களில் ஒன்றான மாந்தை மாதாவின் புனித ஸ்தலத்தில் மாந்தை பங்கு மக்களும் பங்குத் தந்தையுமான அருட்பணி யே. அமல்ராஜ் குரூஸ் அடிகளார் ஆயரின் திருநிலைப்படுத்தல் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர்.
மாந்தை மாதா திருவிழா அன்று சனிக்கிழமை (11) இந் நிகழ்வு திருவிழா முடிந்ததும் பக்தர்கள் மற்றும் அருட்பணியாளர்கள் துறவறச் சார்ந்தவர்கள் புடைசூழந்திருந்த நிலையில் பங்கு தந்தை அருட்பணி யே. அமல்ராஜ் குரூஸ் அடிகளார் குரு முதல்வர் பி. கிறிஸ்துநாயகம் அடிகளார் ஆகியோர் ஆயருடன் இணைந்து கேக் வெட்டும் இந் நிகழ்வு இடம்பெற்றது.
ஆயர் அவர்கள் 6 வருடங்கள் கொழும்பு மறை மாவட்டத்தில் துணை ஆயராக இருந்ததுடன் 5 வருடங்கள் மன்னார் மறைமாவட்ட ஆயராகவும் இருந்து வருகின்றார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)