
posted 8th February 2023
ஊழியர் சம்பளத்துண்டின் மீது விதிக்கப் பட்டுள்ள அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிப்பினை தெரிவிக்கும் முகமாக 2023.02.08 புதன்கிழமை பிற்பகல் 12.30 மணிமுதல் அரைநாள் வேலை நிறுத்தத்தில் வங்கியாளர்கள் ஈடுபட்டனர்.
இதனால் புதன்கிழமை காலை 10.30 மணிமுதல் பணக்கருமபீட கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையிலிருந்து வங்கியாளர்கள் விலகிக் கொண்டனர்.
அத்துடன் தங்களின் இவ்வேலை நிறுத்தத்தால் வங்கி வாடிக்கையாளர்களின் அசௌகரியங்களுக்காகவும் வருத்தம் தெரிவித்துள்ள வங்கியாளர்கள் இன்று (08) மன்னாரில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் மன்னார் நகர் ரவுண்ட போட்டிலும் ஒரு சில மணித்தியாளங்கள் பதாதைகள் ஏந்தியவாறு சுமார் ஐம்பது ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இவ் வேலை நிறுத்தமும், கவனயீர்ப்பு போராட்டமும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)