
posted 6th February 2023
மன்னார் மாவட்டத்தின் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதனை இலக்காக கொண்டு மாவட்ட செயலகமானது மத்தியிலுள்ள பல்வேறு நிரல் அமைச்சுக்கள் மற்றும் மாகாண திணைக்களங்களுடன் இணைந்து வீண்விரயங்களை குறைத்து கடந்த 2022ம் ஆண்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக பூரணப்படுத்தியுள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரானிலி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் 75வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு அன்றையத் தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின உரையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரானிலி டிமெல் மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆற்றிய உரையின் முழு விபரம் பின்வருமாறு
எமது இலங்கைத்திருநாட்டின் 75வது சுதந்திரதின நல்வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் மகிழ்வுடன் தெரிவித்து நிற்கின்றேன்.
நாம் அனைவரும் அறிந்திருப்பதன்படி இலங்கைத் தேசமானது பல இன மத பெரியோர்களின் அரும் முயற்சியினால் 1948 மாசி 4ம் திகதி பிரித்தானியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இவ்வாறு பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை இந்நாட்டில் வாழும் யாவரும் அனுபவிக்கக்கூடியதாக இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் நாட்டுப்பற்றுள்ளவர்களாக திகழவேண்டும்.
எமது தேசமானது தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எமது மாவட்டத்தை பொறுத்தவரையில் நிலைபேறான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் எமது மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதனை இலக்காக கொண்டு மாவட்ட செயலகமானது மத்தியிலுள்ள பல்வேறு நிரல் அமைச்சுக்கள் மற்றும் மாகாண திணைக்களங்களுடன் இணைந்து வீண்விரயங்களை குறைத்து கடந்த 2022ம் ஆண்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக பூரணப்படுத்தியுள்ளது.
மன்னார் மாவட்ட செயலகத்தினால் நேரடியாக செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள்
01.கடந்த 2021ம் ஆண்டில் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான வீட்டுத்தேவையினை பூரணப்படுத்துவதற்கு ஏதுவாக மீள்குடியேற்ற பிரிவின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வெற்றிகரமாக பூரணப்படுத்தப்பட்ட 215 வீட்டுப்பயனாளிகளுக்கான மிகுதி கொடுப்பனவான ரூபா 35.0 மில்லியன் நிதியானது கடந்த 2022ம் ஆண்டு அமைச்சினால் விடுவிக்கப்பட்டு பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அனைத்தும் பூரணப்படுத்தப்பட்டு மக்களின் சுமைகள் குறைக்கப்பட்டுள்ளது.
02.கிராமத்துடனான உரையாடல் திட்டத்தின் கீழ் வாழ்வாதாரம், பொது உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் அபிவிருத்தி, சமூக
நலன் மற்றும் சமூக அபிவிருத்தி போன்ற துறைகளின் கீழ் 50 திட்டங்கள் ரூபா.11.74 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச செயலக மட்டத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாக வீட்டுத்தோட்ட பயிற்செய்கை (பசுமை பொருளாதாரம்) திட்டத்தின் கீழ் 18,662 பயனாளிகளுக்கு ரூபா.32.765 மில்லியன் நிதியில் விதைகள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மக்கள் பயன்பெறும் வகையில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் மன்னார் . நானாட்டான் , முசலி . மடு , மாந்தை மேற்கு ஆகிய 5 பிரதேச செயலகங்களில் பனை அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பல்வேறு திணைக்களங்களூடாக 119,575 மரங்கள் மாவட்டத்தில் நடப்பட்டுள்ளது.
மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கான நலன்புரி நன்மைகளை உரிய நேரத்தில் சரியான முறையில் வழங்குவதற்கு ஏதுவாக நலன்புரி நன்மைகள் சபை திட்டத்தின் ஊடாக தகுதியான அனைத்து குடும்பங்களின் விபரங்களும் தரவேற்றம் செய்யப்பட்டு அமைச்சினால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக எதிர்காலத்தில் பொருத்தமான திட்டங்கள் நன்மைகள் பொருத்தமான பயனாளிகளுக்கு சென்றடைவதனை எம்மால் உறுதிப்படுத்த முடியும்.
03. முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள சிங்கள கம்மான கிராமத்திற்கான குடிநீர் வழங்குதல் திட்டத்திற்காக நீதி அமைச்சின் கீழ் ரூபா 3.35 மில்லியன் நிதியானது விடுவிக்கப்பட்டு திட்டமானது வெற்றிகரமாக பூரணப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
04. உள்ளுர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை ஊக்குவிக்கும் நோக்குடன் மாவட்ட செயலகத்தில் மாபெரும் உற்பத்திக் கண்காட்சி ஒழுங்குசெய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் ஊடாக உள்ளுர் உற்பத்திகளுக்கு சிறந்த சந்தைவாய்ப்பானது எம்மால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
05.உணவு கையிருப்பு, பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்துவதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் கிராமமட்டத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கிராமமட்டத்தில் உணவு வங்கிகள் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக மிகவும் வறிய மக்கள் , முன்பள்ளி சிறுவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் உலக உணவு திட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
06. உலக உணவு திட்டத்தின் ஊடாக பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மடு , மாந்தை மேற்கு மற்றும் முசலி பிரதேச செயலகங்களை சேர்ந்த 11இ600 குடும்பங்களுக்கு ரூபா 132.31 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
உலர் உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் 11இ072 குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான உலர் உணவுகளும் வழங்கப்பட்டது ( அரிசி-50 முப , பருப்பு 20 மப , தேங்காய் எண்ணெய் 5 டு ) மேட்டுநில பயிற்செய்கையினை மேம்படுத்துவதற்கு ஏதுவாக 80 பயனாளிகளுக்கு ரூபா 30.72 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தூவல் நீர்ப்பாசனத் திட்டம் (ஆiஉசழ ஐசசபையவழைn ளுலளவநஅ ) வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கோழி வளர்ப்பு , ஆட்டுக்கொட்டகை மற்றும் மாட்டுக்கொட்டகை அமைத்தல்; போன்றவற்றுக்காக 44 பயனாளிகளுக்கு ரூபா 2.30 மில்லியன் நிதியானது செலவிடப்பட்டுள்ளது.
07. சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் நிதிப் பங்களிப்பின் கீழ் சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 30,427 குடும்பங்களுக்காக 1,449.20 மில்லியன் ரூபா கொடுப்பனவானது சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்கப்பட்டுள்ளது. (மாதாந்தம் 5,000 ரூபா தொடக்கம் 7,500 ரூபா வீதம் வரை)
முதியோர், விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான மொத்தமாக 3,901 நபர்களுக்கான 41.63 மில்லியன் ரூபா கொடுப்பனவானது சமுர்த்தி வங்கிகளினூடாக வழங்கப்பட்டுள்ளது. (மாதாந்தம் 5,000 ரூபா வீதம்) 16 பயனாளி குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட வேலைத்திட்டத்தின் பொருட்டு 4.8 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. சமுர்த்தி ர்ழரளiபெ டுழவவநசல திட்டத்திற்காக 60 பயனாளி குடும்பங்களுக்காக தலா 0.2 மில்லியன் ரூபா வீதம் 12 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.
08. கமத்தொழில் அமைச்சின் கீழ் மாவட்ட விவசாய பிரிவின் ஊடாக வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதற்கு ஏதுவாக ரூபா 3.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 75 பயனாளிகளுக்கு இரண்டு ஆடுகள் வீதம் 150 ஆடுகள் வழங்கப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாக ரூபா 12.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தெரிவுசெய்யப்பட்ட 1372 பயனாளிகளுக்கு உழுந்து மற்றும் பயறு விதைகள் வழங்கப்பட்டது. மேலும் ஐடுழு நிதி அனுசரணையின் கீழ் நவீன விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக ரூபா 17.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 300 பயனாளிகளுக்கு 2022ஃ2023 காலப்பகுதிக்கான திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
09. கமநல அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 181 விவசாயிகளுக்கு 8.675 மில்லியன் ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதுடன், ருளுயுஐனு பங்களிப்பினூடாக 5539 விவசாயிகளுக்கு 50மப படி 276,950மப யூரியா இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி 11,218 விவசாயிகளுக்கு ரூபாய் 162.88 மில்லியன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களூடாக அபிவிருத்தித் திட்டங்களுக்காக 41 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
11. Nர்னுயு யினால் ரூபா 35.8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தொடர்வேலையாக 96 வீட்டுத்தொகுதிகள் 05 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயற்படுத்தப்பட்டுவருவதுடன் கடந்த 2022ம்ஆண்டு ரூபா 6.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 10 வீடுகள் மன்னார் நகரம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுகளில் அமைத்துக்கொடுக்கப்பட்டது.
12. பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் (சுனுர்ளு ) மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களின் ரூபா 92.00 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பிரதேச மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டின் மத்தியிலும் சுகாதார சேவையானது தனது அளப்பெரிய சேவையினை மாவட்ட மக்களுக்கு வழங்கிவருகின்றது.
13. மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம்; ஊடாக ரூபா 81.22 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நீர்ப்பாசன குளங்கள் (கூராய் , தட்சனாமருதமடு , பெரியமடு ) புனரமைக்கப்பட்டதுடன், மத்திய நீர்ப்பாசனத் திட்டத்திற்காக 43.5 மில்லியன் செலவளிக்கப்பட்டு விவசாய பயிற்செய்கை நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
14. வலய கல்வி பணிமனை ஊடாக எமது மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கு ஏதுவாக ரூபா 152 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 19 கல்வி உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்கள் வெற்றிகரமாக பூரணப்படுத்தப்பட்டுள்ளது.
15. உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் கடந்த 2022ம் ஆண்டு ரூபா 92.89 மில்லியன் செலவீட்டில் 31 அபிவிருத்தி திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
16. ஏனைய திணைக்களங்கள் ஊடாக எமது மாவட்டத்திற்கு 203.22 மில்லியன் நிதி தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டு துறை சார்ந்த பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தமாக 2747.5 மில்லியன் அரச நிதி 2022ம் ஆண்டில் எமது மாவட்டத்திற்கு செலவளிக்கப்பட்டுள்ளது. இது தவிர அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக 603.30 மில்லியன் ரூபாய் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் எமது மாவட்டத்தில் உள்ள வறிய மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் போசாக்கான உணவு மற்றும் சுகாதாரத்தினை பேணிப்பாதுகாக்கவேண்டிய மிகவும் பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இதற்கு ஏதுவாக உள்ளுர் உற்பத்திகளை ஊக்கப்படுத்தல், வளவீண் விரயங்களை தவிர்த்தல், வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்கப்படுத்தல் போன்ற பல்வேறு செயற்திட்டங்களுக்கு அரச சேவையாளராகிய நாம் அனைவரும் முன்மாதிரியாக செயற்படுவதுடன் எமது மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்த திடசங்கற்பம் கொள்வோம்.
எமது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ள போதைவஸ்து பாவனையிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுத்து வளமிக்க ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து அற்பணிப்போடு செயற்பட முன்வருவோம்.
சுதந்திர தினத்தினை நினைவுகூறுகின்ற இந்நன்நாளிலே நாமனைவரும் இலங்கையர்கள் எனும் தேசப்பற்றுடன் ஒன்றாக இணைந்து எமது நாட்டினை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்வதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என உறுதிபூணுவோம்.
2022ம் ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் சேவைக்காக தம்மை அர்ப்பணித்த அனைத்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், பணியாளர்களுக்கும், முப்படையினருக்கும், பொலிஸ் திணைக்கள அதிகாரிகளுக்கும், கிராம மட்ட அமைப்புக்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து நிறைவு செய்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)