
posted 26th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி தொலைபேசி ஊடாக சூட்சுமமாக போதையூட்டும் மருந்துகளை விற்பனை செய்த நபரை விசேட அதிரடிப் படை கைது செய்துள்ளது.
அவர்களுக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் காத்தான்குடியை சேர்ந்த 28 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 100 போதையூட்டும் மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
கைதான சந்தேக நபர் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட காலமாக போதை மருந்துகளை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு விநியோகித்து வந்துள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபரை பொலிஸார் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)