
posted 24th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
‘பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி - வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி அணிகளிடையேயான பெருந்துடுப்பாட்டப் போட்டி இன்று (24) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.
இன்றும், நாளையுமாக இரு தினங்கள் நடைபெறும் இந்தப் பெருந்துடுப்பாட்டப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 1917ஆம் ஆண்டு இரு கல்லூரிகளிடையேயும் ஆரம்பமான இந்தப் போட்டி 106ஆவது வருடமாக நடைபெறுகிறது.
இதேவேளை இரு அணிகளும் மோதும் ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்துக்கான 30ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதியும் மூன்றாவது இருபது – 20 போட்டி மார்ச் 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)