
posted 1st February 2023
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்து நடாத்திய பொங்கல் விழா நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகெளரி தரணிதரன் ஆகியோரின் வழிகாட்டுதலில் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கிளை ரீதியாக 15 வகையான பொங்கல் பானைகள் ஏற்றப்பட்டு பல்வேறு வகையான கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கிளைகள் ரீதியாக இடம்பெற்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற கிளைகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)