புனித பூமியை அசுத்தமாக்காதீர்கள் - யாத்திரியருக்கு வேண்டுகோள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் யாத்திரிகர்கள் நல்லதண்ணி நகரில் இருந்து மலைக்கு செல்லும் வழிகளில் உக்கிப்போகாத கழிவுப் பொருட்களை வீசாமல் மலை அடிவாரத்தில் உள்ள நகரில் உள்ள குப்பை தொட்டியில் போடும்படி கேட்டுக் கொள்ளபட்டுள்ளனர்.

இம் முறை சிவனடி பாத மலை பருவ காலம் ஆரம்பிக்க முதல் இந்நாள் வரை சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த யாத்திரிகர்கள் விட்டு சென்ற பெருந் தொகையான உக்கா கழிவு பொருட்கள் அனைத்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் சிவராம் ராஜவீரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய மூன்று லட்சம் யாத்திரிகர்கள் வருகை தந்த நிலையில் நல்லதண்ணி சிவனடி பாத வழியில் உள்ள வீதியின் இரு பகுதிகளும் வீசி எறிந்து உள்ள நிலையில் இந்த கழிவுகள் மற்றும் உக்கா பிலாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு ரிக்காடன் கிராமத்தில் உள்ள கழிவுகள் சேகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

செயலாளர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் சிவனடி பாத மலை பருவ காலங்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்ற பல லட்சம் ரூபாய் பணம் விரயம் செய்ய வேண்டி உள்ளது எனவும் அந்த பணம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு பாரிய இழப்பு எனவும் கூறினார்.

இந்த விலை மதிப்பு உள்ள புனித பூமியை எதிர் கால சந்ததிக்காக விட்டு செல்ல வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் யாத்திரிகர்கள் வருகை தரும் போது பிலாஸ்டிக் பொருட்கள் மற்றும் பொலித்தீன், ஏனைய கழிவு பொருட்களை யாத்திரிகர்கள் நல்லதண்ணி நகரில் இருந்து மலைக்கு செல்லும் வழிகளில் வீசாமல் மலை அடிவாரத்தில் உள்ள நகரில் உள்ள குப்பை தொட்டியில் போடும்படி கேட்டுக் கொண்டார். அத்துடன் சகல குப்பைகளையும் மலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கின்றார்.

புனித பூமியை அசுத்தமாக்காதீர்கள் - யாத்திரியருக்கு வேண்டுகோள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)