புதிய தவிசாளர் பதவியேற்பு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சம்மாந்துறை பிரதேசத்திற்கு இன்றைய நிலையிலுள்ள பிரதேச சபைத்தவிசாளர் எனும் ஒரேயொரு அரசியல் அதிகாரமும் இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காகவும், கட்சி பேதங்களுக்கப்பால் நீதி, நேர்மையான மக்கள் சேவையை முன்னெடுக்கும் நோக்குடனுமே தவிசாளர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளேன்”

இவ்வாறு, சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராகப் பதவியேற்றுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், உயர் பீட உறுப்பினரும், அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாத் இராஜினாமா

செய்ததையடுத்து, சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட சபைக் கூட்டம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே சிறந்த ஆளுமையும் சேவை மனப்பாங்கும் கொண்ட மாஹிர் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஏற்கனவே இலங்கை வெளிநாட்டு அமைச்சின் ஐ.நா. பிரிவில் மனித உரிமைகள் ஆராய்ச்சி உதவியாளராகப் பதவிவகித்த தவிசாளர் மாஹிர். ஐ. நாவுக்கான இலங்கை அரசின் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒரு முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளதுடன், இவர் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமாவார்.

புதிய தவிசாளர் மாஹிரின் பதவிப் பிரமாண நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் அலுவலகத்தில் சிறப்புற இடம்பெற்றது. இந் நிகழ்வில் உப தவிசாளர் ஏ. அச்சில முஹம்மட், சபைச் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் மற்றும் சபை உறுப்பினர்களான ஏ.எம்.எம். றியாஸ், ஏ.எல்.எம். ஜிப்ரி, ஏ. யூசுப் லெவ்பை, கே.எல். சிஹாமா, ஏ.எச். அன்வர், ஏ.எம். நபீல், ஏ.ஏ.சீ.எம். நிசாம், எம்.ஏ. தம்பிக்கண்டு மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

புதிய தவிசாளர் மாஹிர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சம்மாந்துறைப் பிரதேசத்தைப் பொறுத்தவரை எமக்கு பாராளுமன்ற உறுப்பினரோ, மாகாண சபை உறுப்பினரோ தற்போதய நிலையில் இல்லை.

இருக்கும் ஒரேயொரு அரசியல் அதிகாரம் பிரதேச சபைக்கான தவிசாளர் பதவி மட்டுமேயாகும். இதுவும் இல்லாமல் போய்விடக்கூடாது எனும் நோக்கிலும், மக்களுக்கு நீதி, நேர்மையுடன் சேவையாற்ற வேண்டுமென்ற நோக்கிலும் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டேன்.

ஆனாலும் ஜனநாயக ரீதியில் போட்டியிடாது வாக்கெடுப்பில் கலந்து கொண்ட உறுப்பினர்களையே, கலந்து கொள்ளாமல் செய்து தடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீவிர முயற்சியெடுத்தமையும் விசனிக்கத்தக்கது,

இதனால் பிரதேசத்திற்கு ஏற்படவிருந்த பாதிப்பு முறியடிக்கப்பட்டு இன்று தவிசாளராக நான் பதவிப் பொறுப்பேற்றுள்ளேன்” என்றார்.

இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமை மற்றும் உயர் மட்ட உறுப்பினர்கள் பிரமுகர்கள் பலரும் புதிய தவிசாளர் மாஹிருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

புதிய தவிசாளர் பதவியேற்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)