
posted 20th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புகையிரத கடவையை கடந்த இ. போ. ச. பஸ்மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.
கிளிநொச்சி அறிவியல் நகரில் திங்கள் (20) காலை 8.10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புகையிரதக் கடவையை கடந்து கொண்டிருந்த பஸ்ஸின் பின்புறமாக ரயில் மோதியது. எனினும், இந்த விபத்தால் பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இதேசமயம், ரயில் மோதிய பஸ் அருகில் நின்ற காரையும் மோதி சேதப்படுத்தியது. இதில், யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பீடாதிபதியின் கார் சேதமடைந்தது என்று தெரிய வருகின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)