
posted 21st February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னாரில் வான்நோக்கி மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கைக்கான அறுவடைகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. ஆனால் நெல்லுக்குரிய நிர்ணய விலையின்மையால் விவசாயிகள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மன்னார் விவசாயிகளிடம் வினவியபோது அவர்கள் தெரிவிப்பதாவது;
நெல்லுக்கு உரிய நிர்ணய விலை இல்லாத காரணத்தால் விவசாயம் செய்வதற்கு பட்ட கடன் மீளளிக்க முடியாத நிலையில் இருப்பதுடன் பொருட்களுக்கான விலையேற்றம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவற்றை நினைக்கும் போது அடுத்த கட்ட வாழ்க்கை பற்றி விவசாயிகள் நினைக்க முடியாதுள்ளது.
விவசாயத்திற்கான உழவு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து உரம் கிருமி நாசினி மிகைப்படுத்தப்பட்ட செலவுகள், அறுவடையின் பின் நெல்லுக்கான நிர்ணய விலை இல்லை என்றால் விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களின் நிலை என்ன? பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.
தற்போது தனியார் முதலாளிகளால் சிவப்பு நாடு வகைகள் 5500 ரூபாவுக்கும் சம்பா 6000 ரூபா வரை கொள்வனவு செய்கிறார்கள். அரசாங்கம் நிர்ணயித்த விலையும் அடிமட்டு விலையாக உள்ளது.
எனவே தற்போதைய சூழலில் ஒரு கிலோ நெல் 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டால் மாத்திரமே ஓரளவிற்கேனும் விவசாயிகள் கடன் மற்றும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியும்.
எனவே அரசாங்கம் விவசாயிகளின் நிலையை புரிந்து கொண்டு விரைந்து முடிவெடுத்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல்லை 130 ரூபாவிற்கு அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)