நெல்லினை விற்க  மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி காரியாலயத்துடன் தொடர்பு கொள்க

அரசின் சுற்று நிருபத்துக்கு அமைவாக குறிப்பிட்ட நெல்லை குறிப்பிட்ட விலைக்கு கொள்முதல் செய்ய இருப்தால் நெல்லினை வழங்க தயாராக உள்ள விவசாயிகள் உடனடியாக மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி அபிவிருத்தி காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளும்படி மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் அன்ரனி மரேன்குமார் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதவிப் பணிப்பாளர் அன்ரனி மரேன்குமார் மன்னார் விவசாயிகளுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோளில்;

நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டு, 2022 / 2023 பெரும்போக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் 2023.02.09 ம் திகதிய சுற்றுநிருப இல DFD 2023 - 1 இற்கு அமைவாக மாவட்ட செயலாளர் தலைமையில் சிறிய மற்றும் நடுத்தரளவு அரிசி ஆலை உரிமையாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மன்னார்

மாவட்டத்தில் 'நாடு' இன நெல்லினை மட்டுமே பின்வரும் நிபந்தனை அடிப்படையில் மேற்க்கொள்வதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது.

1. ஆகக் கூடிய ஈரப்பதன் 14மூ மற்றும் ஆகக் கூடிய நெற்பதரினளவு 9மூ உடைய நாடு நெல் ரூபா 100 - இற்கும்

2. ஈரப்பதன் 14மூ ற்கும் அதிகமான மற்றும் 22மூ அதற்கும் குறைந்த நாடு நெல் ரூபா 88க்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதால் இத்திட்டத்தில் நெல்லினை வழங்குவதற்கு தயராகவுள்ள விவசாயிகள் இது பற்றிய தகவல்களை உடனடியாக மன்னார் கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட காரியாலயத்திற்கு (0232222162) திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை 9.00 தொடக்கம் மாலை 4.00 க்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்பு கொள்ளத் தொலைபேசி இல; 0232222162

உறவுகளின் துயர்பகிர - [Prices VAT included]

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00
நெல்லினை விற்க  மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி காரியாலயத்துடன் தொடர்பு கொள்க

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)