
posted 6th February 2023
போயா தினமான நேற்று (05) ஞாயிறு யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் பொலிஸாரால் இரத்த தானம் செய்யப்பட்டது.
ஆரியகுளம் நாக விகாரையின் விகாரதிபதி சிறீ விமல தேரரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டை நீக்கும் பொருட்டு இந்த இரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில், யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்வில், வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மாஅதிபர் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)