
posted 14th February 2023
தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக இவ்வளவு நாட்களாக அடிக்கடி நடைபெற்று வந்த பஸ் வண்டிகளின் வேலை நிறுத்தமானது அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ற வெற்றி கிடைத்தமையினால் முடிவிற்கு வந்துள்ளது.
கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட 1800ற்கும் அதிகமான அபேலியோ (Abellio) நிறுவனத்தைச் சேர்ந்த ஓட்டுனர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த தொழிற் சங்க நடவடிக்கையானது இப்போது ஒரு முடிவிற்கு வந்துள்ளது.
சாரதிகளுக்கு, அவர்களுடைய கோரிக்கையானது அவர்களது தொழிற் சங்கங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, இந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. இதனால், சாரதிகளுக்கு சராசரியாகக் கிழமைக்கு £100 அவர்களுடைய அடிப்படை ஊதியத்தில் அதிகரிப்பைப் பெறுவார்கள்.