
posted 1st February 2023
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீயினால் ஒரு குடியிருப்புப் பகுதி சேதத்துக்கு உள்ளாகிய போதும் ஏனைய பகுதிகள் தீ பரவாமல் காப்பாற்றப்பட்டது.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்ப்பி தோட்ட குமரி பிரிவில் ஆர்.பி.கே. பிலான்டேசனுக்கு உரித்தான 24 மனைகள் கொண்ட தொடர் குடியிருப்பிலிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீயினால் ஒரு குடியிருப்பு பலத்த சேதத்துக்கு உள்ளாகிது.
அயலவர்களின் ஒத்துழைப்பால் தீயானது ஏனைய குடியிருப்புகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.
04 பெரியவர்களும், 02 பாடசாலை மாணவர்களும், 01 குழந்தையும் உள்ளடங்களான 07 அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்தினரின் குடியிருப்பிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டது.
இத் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்துக்கு தோட்ட நிர்வாகம் தற்காலிகமாக வீடு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தீச் சம்பவமானது இன்று புதன்கிழமை (01) காலை 09 மணியளவில் நடைபெற்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிவதில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)