
posted 26th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நவ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தலைமையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு போட்டி இடும் வேட்பாளர்கள் சனிக்கிழமை (25) காலை 10 மணியளவில் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பு உடன் எவ்வித தடையுமின்றித் தேர்தலை குறிப்பிட்ட தினங்களில் நடத்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்து அமைதி போராட்டம் நடத்தினர்.
அவர்கள் இப் போராட்டத்தின்போது பதாதைகள் ஏந்தியவாறு முன் வைத்த கோரிக்கைகளாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைத்து பொருட்களும் பன் மடங்கு அதிகரித்துள்ளது.. இதனால் நாள் ஒன்றுக்கு 3500 ரூபாய் தேவைப்படும் நிலையில் உள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது.. அதுவும் பல தோட்டத்தில் அரை நாள் வேதனம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
பல பகுதிகளில் பட்டினி இறப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு நாடு செல்லும் வேளையில் நாட்டின் தலைவர் உடன் கவனம் செலுத்தி இலங்கை வாழ் மக்கள் நலன் கருதி மின் கட்டணம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் உணவு பொருட்கள் விலை குறைப்பு செய்வதுடன் குறித்த திகதிகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் விடுத்திருந்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)