
posted 17th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
தேகத்தை வலுவூட்டலும் உடலில் நோயின் எதிர்ப்பு சக்தியை கூட்டுதல் என்ற நோக்கில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வானது வைத்திய கலாநிதி மதுரநாயகம் அவர்களின் ஏற்பாட்டில் அவரின் தலைமையில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது.
இத் தேக வலுவூட்டல் நிகழ்வுக்கான அநுசரனையை ரெக்ஸ்ரெச் பிரைவேட் லிமிட்டட் மேற்கொண்டிருந்தது.
இந் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமைபுரிவோரும் மற்றும் இச் செயலகப் பிரிவின்கீழ் இயங்கும் விளையாட்டு கழகங்களின் வீரர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட யாவருக்கும் ரெக்ஸ்ரெச் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)