டிலாசால் ஆங்கில பாடசாலை சிறார்களின் மரதன் ஓட்டப்போட்டி

மன்னார் நகரில் அமைந்துள்ள டிலாசால் ஆங்கில பாடசாலையின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வாக புதன்கிழமை (08) மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது.

இக் கல்லூரியின் முதல்வர் அருட் சகோதரர் யோகநாதன் சோசை (டிலாசால் சபை) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப போட்டியில் முதலாம் ஆண்டு தொடாக்கம் ஐந்தாம் ஆண்டு வரை கற்கும் இப் பாடசாலை மாணவர்கள் சுமார் ஐம்பது மாணவர்களில் இரு பாலாரும் கலந்து கொண்டனர்.

இம் மரதன் ஓட்டப் போட்டியானது மன்னார் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி மன்னார் நகர் ஊடாக இப் பாடசாலை அமைந்துள்ள மன்னார் இரண்டாம் கட்டையை வந்தடைந்தது.

டிலாசால் ஆங்கில பாடசாலை சிறார்களின் மரதன் ஓட்டப்போட்டி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)