
posted 24th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ஜனாதிபதியிடமான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு தெரியும் உங்களுக்கு பெரிய மூளை உள்ளது என்று.
ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை IMF இனது உதவியுடன் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக சாக்கு போக்கு சொல்லப்பட்டு பிற்போடப்படும் உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா?
ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுமா? இதற்கான கால அவகாசம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)