
posted 13th February 2023
சுய நிர்ணய உரிமை கோரியும் யாழ்ப்பாணத்தில் நேற்று (11) ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று சனிக்கிழமை (11) எதிர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பமாகிய பேரணி, பரமேஸ்வரா சந்தி வரை சென்று பின்னர் அங்கிருந்து கந்தர்மடத்தினூடாக மீண்டும் பல்கலைக்கழகத்தைச் சென்றடைந்தது.
இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)