
posted 28th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோபளை கிழக்கு பகுதியில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, குறித்த அகழ்வில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட இரு உழவு இயந்திரங்களும், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)