
posted 19th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
மட்டக்களப்பு வாவியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லேடி மெனிங் வீதிக்கு அருகாமையில் உள்ள வாவியில் நேற்று முன் தினம் மாலை குறித்த இளைஞன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ரீ. சுதர்சன் என்ற இளைஞன் என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில், இவரது சடலம் நேற்று முன் தினம் மட்டக்களப்பு வாவியில் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)