
posted 5th February 2023
கிளிநொச்சி மாவட்டத்திலும் சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. பொது இடங்கள், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
கிளிநொச்சி மாவட்டத்தின் அரச திணைக்களங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்ட கொண்டாடப்பட்டது. இதேவேளை மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், துப்பரவாக்கும் பணிகள் இடம்பெற்றன.
பரந்தன் சந்தியிலிருந்து, டிப்போ சந்திவரை இளைஞர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)