
posted 14th February 2023
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி - மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 776650.00 ரூபா பெறுமதியான மருந்து வகைகள் வழக்கல்...!
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ரூபா 776650.00 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
தற்போதைய மருத்துப் பொருட்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மருந்துப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகரிடம் சந்நிதியான் ஆச்சிரம இயக்குநர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
இவ் உதவித் திட்டத்தில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)