
posted 2nd February 2023
இலங்கை சுதந்திரம் பெற்று 75வது ஆண்டை கொண்டாட இருக்கும் இந்த வேளையில் இது சிங்கள தேசத்தின் சுதந்திர நாளாக இருக்கலாம்.
ஆனால், இத் தினம் தமிழினத்தின் கரிநாள் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் வெளிப்படுத்தியுள்ளது.
இதனால் இச் சுதந்திர தினத்தை தமிழனம் பகிஸ்கரிக்க வேண்டும் எனவும், தமிழர் தேசமாக அணிதிரள்வோம் என்றும், அடக்கு முறைக்கு எதிராக அன்றையத் தினம் அணிதிரண்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும்படியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 04.02.2023 அன்று சனிக்கிழமை காலை 09 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இக் கவனயீர்ப்பு போராட்டம் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஆதரவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)