
posted 23rd February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் பிற்பகல் கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அதன் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி யூ.எம். நிஸார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.
சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ. றைசுல் ஹாதி, செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். ரொஷான் அக்தர், பொருளாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஜி. பிரேம் நவாத் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் உப தலைவர்களாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான அன்ஸார் மௌலானா, ஆரிகா காரியப்பர், என்.சிவரஞ்ஜித் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுடன் நிர்வாகக் குழுவுக்கான உறுப்பினர்களும் தெரிவாகியுள்ளனர்.
இக்கூட்டத்தில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு, சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அதன் புதிய செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ரொஷான் அக்தர் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)